தற்போதைய செய்திகள்

செய்துங்கநல்லூர் அருகே  சொத்து தகராறில் இளம்பெண்  வெட்டிக் கொலை

செய்துங்கநல்லூர் அருகேயுள்ள நேசமணி நகரை சேர்ந்தவர்  ராமலிங்கம் (80). இவருக்கு மனைவி இசக்கியம்மாள், ராயப்பன், பழனி தாமஸ் ஆகிய 2 மகன்களும் வசந்தா(40) என்ற மகளும் உள்ளனர். இதில்

கவிதன்

செய்துங்கநல்லூர் அருகே சொத்து தகராறில் ஞாயிற்றுக்கிழமை இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது சகோதரனை போலீஸார் தேடி வருகின்றனர்.

செய்துங்கநல்லூர் அருகேயுள்ள நேசமணி நகரை சேர்ந்தவர்  ராமலிங்கம் (80). இவருக்கு மனைவி இசக்கியம்மாள், ராயப்பன், பழனி தாமஸ் ஆகிய 2 மகன்களும் வசந்தா(40) என்ற மகளும் உள்ளனர். இதில் ராயப்பன் கடந்த 4 வருடங்களுக்கு முன்னால் மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கு செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. வசந்தாவை தருவை அடுத்துள்ள ஆலங்குளத்தில் அந்தோணி என்பருக்கு  திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அங்கு அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதால், தனது மூன்று குழந்தையுடன் அங்கிருந்து பிரிந்து வந்து  தகப்பனார்  ராமலிங்கம் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் அவர் ராமலிங்கத்துக்கு சொந்தமான வீட்டில் இருந்து சுமார் 100க்கு மேற்பட்ட மாடுகளை பராமரித்து வந்தார் . மேலும் தந்தையின் சொத்துகளை அவரே பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.இது அவரது சகோதரர் பழனிதாமஸ்க்கு பிடிக்கவில்லையாம். தங்கை வசந்தா தந்தைக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததால் சொத்து முழுவதையும் தங்கை வசந்தாவுக்கே எழுதி வைத்துவிடுவாரோ என கருதி வந்ததாக கூறப்படுகிறது.இதனால் வசந்தாவுக்கு பழனி தாமஸ்க்கு பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் செய்துங்கநல்லூரை அடுத்த அய்யனார்குளம் பட்டி குளத்தில் வசந்தா மாடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பழனி தாமஸ் வசந்தாவை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.இதில்  சம்பவ இடத்திலிலேயே  வசந்தா இறந்தார். இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கொலை நடந்த இடம் தூத்துக்குடி மாவட்டமா, திருநெல்வேலி மாவட்டமா என செய்துங்கநல்லூர்  போலீஸாருக்கு  சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது.  இதனால் 2 மணி நேரம் தாமததிற்கு பிறகே வசந்தாவின் சடலம் பிரேதபரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT